For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை: மன்னாரில் ஒரே குழியில் 80 எலும்புக் கூடுகள்: தமிழர்களுடையதா?

By Siva
Google Oneindia Tamil News

80 skeletons found in tamil dominated area in Sri Lanka
கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வீடு கட்ட குழி தோண்டியபோது அதில் 80 எலும்புக்கூடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசித்து வரும் மன்னார் மாவட்டத்தில் உள்ள திருகாதீஸ்வரத்தில் கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி வீடு கட்ட குழி தோண்டியுள்ளனர். அப்போது அந்த குழிக்குள் 4 எலும்புக் கூடுகள் இருந்ததை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அண்மையில் அதே இடத்தில் குழி தோண்டியுள்ளனர்.

அப்போது மேலும் 80 எலும்புக்கூடுகள் அந்த குழியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த எலும்புக்கூடுகள் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த கூடுகளில் பல பெண்கள் மற்றும் குழந்தைகளாக இருக்கக்கூடும் என்று விசாரணை மருத்துவ அதிகாரி தனஞ்செய வைத்தியரத்னே தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரம் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே நடந்த போரின்போது அப்பாவி தமிழ் மக்களை கொன்று அந்த இடத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

English summary
80 skeletons have been found when they dug a place for construction in a tamil dominated area in Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X