For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோத்தபாய ராஜினாமா! பாதுகாப்பு செயலராக பசநாயக்க நியமனம்! ராணுவ தளபதியும் விலகுகிறார்!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை அதிபராக மைத்ரிபால சிறிசேன பதவியேற்ற நிலையில் அந்நாட்டின் பாதுகாப்பு துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாய ராஜினாமா செய்த நிலையில் பசநாயக்க அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் ராணுவம் மற்றும் கடற்படை தளபதிகளையும் ராஜினாமா செய்ய மைத்ரிபால உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Abeykoon new Presidential Secretary, Basnayake as Defence Secretary

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றதைத் தொடர்ந்து அவரால் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து பதவி விலகி வருகின்றனர். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் முதலில் தமது பதவியை ராஜினாமா செய்தார்.

அவரைத் தொடர்ந்து பாதுகாப்பு செயலராக இருந்த மகிந்தவின் சகோதரர் கோத்தபாயவும் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து புதிய பாதுகாப்பு செயலராக சுற்றுச் சூழல் அமைச்சக செயலர் பசநாயக்கவை நியமித்து அதிபர் மைத்ரிபால உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் அதிபரின் செயலாளராக பொதுநிர்வாக அமைச்சகத்தின் செயலாளர் அபயகோன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவைத்தான் பாதுகாப்பு செயலராக நியமிக்க மைத்ரிபால் சிறிசேன முடிவு செய்திருந்தாராம். ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே பசநாயக்கவை மைத்ரிபால நியமித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே தற்போதய இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க, கடற்படைத் தளபதி ஜயந்த பெரேரா ஆகியோரை ராஜினாமா செய்யவும் மைத்ரிபால உத்தரவிட்டுள்ளார்.

அதே நேரத்தில் விமானப் படை தளபதியான குணதிலக வரும் 19-ந் தேதி ஓய்வு பெற உள்ளதால் அவர் தாமாக ஓய்வு பெறட்டும் என்றும் மைத்ரிபால அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

English summary
Secretary to the ministry of Public Administration Abeykoon has been appointed Srilanka Presidential Secretary while Environment Ministry Secretary Basnayake has been appointed Defence Secretary by new President Maithripla Sirisena
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X