பிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம்! பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்!!

யாழ்ப்பாணம்: விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் வையாபுரி, கவிஞர் சிநேகன், நடிகர் கணேஷ் ஆகியோர் அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்தனர். இவர்களைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சென்ற நடிகர் சதீஷ், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இல்லம் முன்பாக நின்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரசு மற்றும் பல்வேறு விளம்பர நிறுவனங்கள், இசை நிகழ்ச்சிகளுக்கு தமிழக திரைக்கலைஞர்கள் மீண்டும் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். யுத்த காலத்தில் ஒரு காக்கா குஞ்சு கூட அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.

அப்படியே பணம் கிடைக்கிறதே என போனவர்களும் சர்ச்சையில் சிக்கி போதும்டா சாமீ என நாடு திரும்பிய நிகழ்வுகள் ஏராளம். யுத்தம் முடிந்து ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில் தமிழக திரை கலைஞர்கள் இலங்கையை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர்கள் வையாபுரி, கணேஷ் மற்றும் கவிஞர் சிநேகன் இலங்கை சென்றிருந்தனர். இவர்களைத் தொடர்ந்து நடிகர் சதீஷும் இலங்கை பயணம் மேற்கொண்டிருந்தார்.
இலங்கையின் யாழ்ப்பாணம் சென்ற நடிகர் சதீஷ், வல்வெட்டித் துறையில் சிங்கள ராணுவத்தால் இடிக்கப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இல்லம் முன்பாக நின்று போட்டோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் ஈழத்தலைவர் திரு.பிரபாகரன் அவர்களின் இல்லம்.
— Sathish (@actorsathish) April 15, 2018
வல்வெட்டித்துறை. pic.twitter.com/eHd2msHvEc