For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காமன்வெல்த் மாநாடு... இலங்கை எதிர்கொள்ளப் போகும் புதிய சவால்கள்!

By Mathi
Google Oneindia Tamil News

After CHOGM, Rajapaksa Regime faces fresh challenges
கொழும்பு: காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு முடிவடைந்த நிலையில் இலங்கை அரசு புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக இலங்கையில் வெளியாகும் சண்டேடைம்ஸ் ஏடு தெரிவித்துள்ளது.

சண்டேடைம்ஸ் ஏட்டில் வெளியான செய்தி விவரம்:

இந்திய பிரதமர் மன்மோகன்சிங், கொழும்பு மாநாட்டுக்கு வராத காரணத்தினால் மீண்டும் ஒருமுறை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நேரத்தில் இலங்கை, இந்தியாவை தவிர்த்து சீனா மற்றும் பாகிஸ்தானுடன் அதிக உறவை ஏற்படுத்த முனையுமாயின் அது இந்திய - இலங்கை உறவை பெரிய அளவில் பாதிக்கும்.

மேலும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இலங்கைக்கு விடுத்த எச்சரிக்கை வெறுமனே இங்கிலாந்தால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று எடுத்துக்கொள்ள முடியாது. மாறாக தமது நட்பு நாடான அமரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் ஒட்டு மொத்த எச்சரிக்கையாகவே இதனை கருத வேண்டியுள்ளது.

ஏனெனில் கேமரூன் இலங்கைக்கு செல்வதற்கு முன்னர் இது தொடர்பில் இந்திய பிரதமருக்கு விளக்கம் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னர் இலங்கை சர்வதேச விசாரணை தொடர்பில் வெறுமனே வார்த்தை பிரயோகங்களை பிரயோகிப்பதை போன்றல்லாமல் இனிமேல் கருத்தை வெளியிடும் போது காமன்வெல்த் நாடுகளின் தலைவர் என்ற நிலையில் கருத்துக்களை வெளியிட வேண்டும்.

இது இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் தமது கூட்டணிகட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு மத்தியில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தக்கூடும்.

இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Commonwealth summit that ends has posed tough and newer challenges to the UPFA Government. It is still too early to make a fuller assessment of the week-long event including the three-day meeting of leaders. Yet, some important foreign policy and domestic issues have already come to the fore. One is Sri Lanka’s future relations with India, the country’s one time strong ally and closest neighbour.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X