For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தகாத வார்த்தைகளில் 19 நிமிடம் திட்டிய ராஜபக்சே! 'அந்தரங்க'த்தை அம்பலப்படுத்தி மிரட்டிய சந்திரிகா!!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்சே முதல் முறையாக பொறுப்பேற்ற போது அவருக்கு வாழ்த்து சொன்னதற்காக தம்மை தகாத வார்த்தைகளால் 19 நிமிடம் திட்டினார் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ராஜபக்சேவின் அந்தரங்க வாழ்க்கை பற்றி நான் விவரித்த போது தொலைபேசி இணைப்பை அவர் துண்டித்து விட்டார் என்றும் சந்திரிகா கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலை முன்வைத்து மீண்டும் அரசியல் களத்தில் பரபரப்பானவர் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க. அவர் அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

Chandrika Kumaratunga slams Mahinda Rajapaksa

நான் அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் நேரத்தில் அடுத்த அதிபர் வேட்பாளராக ராஜபக்சேவை நிறுத்தினேன். அப்போது இருந்த ஆளும் கட்சி உறுப்பினர்களில் 61 பேரில் 56 பேர் ராஜபக்சேவை அதிபர் வேட்பாளராக நிறுத்த வேண்டாம். அவர் கட்சி தலைமைக்கு பொருத்தமற்றவர் எனவும் தெரிவித்தனர்.

ஆனால் அவர் தனது தவறுகளை உணர்ந்து மக்களுக்கு நல்லாட்சி வழங்குவார் எனும் நம்பிக்கையில் நானும், இன்னும் மூவரும் அவரை அதிபராக வேட்பாளராக நியமித்தோம். அவரோ ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொண்டு, எனக்கு எதிராக பேசுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

ராஜபக்சே முதல் முறையாக அதிபராக பொறுப்பேற்ற பின்னர் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக தொலைபேசியில் பேசினேன்.

அப்போது, அவர் என்னை 19 நிமிடங்கள் தொடர்ச்சியாக தகாத வார்த்தைகளினால் திட்டித் தீர்த்தார். நான் அமைதியாக அவர் கூறியவற்றையெல்லாம் கேட்டு விட்டு, குறிப்பிட்ட சிலர் மட்டுமே அறிந்த அவரின் வாழ்க்கை ரகசியத்தை கூறினேன். உடனே அவர் தொலைபேசி அழைப்பை துண்டித்து விட்டார்.

பின்னர் மகிந்த என்னை சிறிது சிறிதாக பழிவாங்கினார். என்னை அரசின் இல்லத்திலிருந்து வெளியேற்றுவதற்காக எனக்கு எதிராக வழக்கும் தொடர்ந்து என்னை மிகவும் கேவலப்படுத்தினார். எனினும் அவரால் அந்த வீட்டை பறிக்க முடியாது போய்விட்டது.

இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகாலமாக அவர் நடத்திய அரசியல் சீரழிவுகளை பொருட்படுத்த முடியாமல் பல்வேறு தரப்பினர் என்னை மீண்டும் அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தினர்.

ஆனால் மீண்டும் ஒருமுறை நான் அரசியலுக்கு வர விரும்பாததினால் இந்நாட்டை கட்டியெழுப்ப சிறந்த தலைமைத்துவம் ஒன்று வேண்டும் என தீர்மானித்து அதற்கு ஏற்றாற் போல் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவை நியமித்தேன்.

இவ்வாறு சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.

English summary
Srilanka Former President Chandrika Kumaratunga slams Mahinda rajapaksa over SLFP party issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X