For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சும்மா அதிருது... ராஜபக்சே வீட்டு பெண்களும் ஊழலில் சளைத்தவர்கள் அல்ல.....

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சே மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சேவின் மனைவி புஷ்பா ராஜபக்சே ஆகியோர் நடத்தி வந்த தன்னார்வ நிறுவனங்களின் வங்கி கணக்குகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் முடக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் மகிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது அண்ணன், தம்பி, மனைவி என ஒட்டுமொத்த குடும்பமே அதிகாரத்தில் கோலோச்சியது. தற்போது ராஜபக்சே தோற்கடிக்கப்பட்ட நிலையில் குடும்பத்தினரின் முறைகேடுகள் தோண்ட தோண்ட அலாவுதீன் அற்புத விளக்காக வந்து கொண்டே இருக்கிறது.

Funds in foundations of Rajapaksa wives frozen

ராஜபக்சேவின் மனைவி ஷிரந்தி வைத்திருக்கும் வங்கி கணக்கை ஆரம்பிக்க போலியான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன. இதனை தவிர ஷிரந்தி ராஜபக்சே நடத்தி வரும் கால்டன் முன்பள்ளிகள் மூலம் முறைகேடாக பணம் சம்பாதிக்கப்படுவதாக ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன.

ஷிராந்தி ராஜபக்சே நடத்தி வந்த சிறிலக் சவிய நிறுவனம், புஷ்பா ராஜபக்சே நடத்திய தமது பெயரிலான நிறுவனத்தின் பணமும் இந்த டுபாக்கூர் ஆவணங்கள் மூலம் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளில்தான் உள்ளன.

இந்த வங்கி கணக்குகள் சர்ச்சைக்குள்ளாகி நீதிமன்றத்துக்கும் சென்றுவிட்டது. இதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய ராஜபக்சே குடும்ப பெண்களில் வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது, ஏற்கெனவே மலிகந்த நீதிமன்றமும் இதே வங்கிக் கணக்குகளை முடக்க உத்தரவிட்டிருந்தது.

அத்துடன் ஷிராந்தி மற்றும் புஷ்பா ஆகியோரிடம் விரைவில் விசாரணையும் நடத்தப்பட இருக்கிறதாம்.

English summary
Two different Magistrates’ Courts have frozen funds belonging to the Sirilak Saviya Foundation and the Pushpa Rajapaksa Foundation. The Sirilak Saviya Foundation is headed by Shiranthi Rajapaksa, wife of former president Mahinda Rajapaksa. The Pushpa Rajapaksa Foundation is headed by Pushpa, the wife of former Economic Development Minister Basil Rajapaksa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X