For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

34,000 துப்பாக்கிகள் சட்டவிரோத விற்பனை வழக்கில் கோத்தபாய ராஜபக்சே அடுத்த வாரம் கைது?

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: 34,000 துப்பாக்கிகளை சட்டவிரோதமாக ரக்னா லங்கா என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்த வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே அடுத்த வாரம் கைது செய்யப்படலாம் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரக்னா லங்கா என்ற நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக 34,000 துப்பாக்கிகளை இலங்கையின் பாதுகாப்பு செயலராக இருந்த போது கோத்தபாய ராஜபக்சே வழங்கினார் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பான வழக்கில் 89 துப்பாக்கிகளைத்தான் அவர் சட்ட ரீதியாக கொடுத்தார் என்பது தெரியவந்தது.

Gotabaya Rajapaksa may arrest in arms smuggle scam?

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த ஜனாதிபதி நியமன ஆணைக் குழு முன் கோத்தபாய பலமுறை ஆஜராகி விளக்கம் அளித்து வந்தார்.

இந்த நிலையில் இவ்வழக்கில் அடுத்த வாரம் கோத்தபாய ராஜபக்சே கைது செய்யப்பட வாய்ப்பிருக்கிறது என்று கொழும்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Srilanka's former defence Secretary Gotabaya Rajapaksa will be arrest in the arms smuggle scam, sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X