For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யாழ். மிருசுவில் 8 தமிழர் படுகொலை வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட ராணுவ அதிகாரிக்கு பொது மன்னிப்பு

Google Oneindia Tamil News

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் மிருசுவிலில் 5 வயது சிறுவன் உட்பட 8 தமிழரை கழுத்தறுத்து படுகொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சே பொதுமன்னிப்பு அளித்துள்ளது தமிழர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் 2000-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்களில் 5 வயது சிறுவன் உட்பட 8 பேரின் சடலங்கள் புதைகுழி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டன.

Gotabaya Rajapaksa Pardon to Army Sergeant Sunil Ratnayake in Eelam Tamils massacre

8 தமிழர்களுமே கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பான வழக்கில் ராணுவ சார்ஜண்ட் சுனில் ரத்நாயக்க உட்பட 5 பேர் கைது செய்யபப்ட்டனர். இதில் சுனில் ரத்நாயக்கவுக்கு 2015-ம் ஆன்டு கொழும்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

இந்நிலையில் சுனில் ரத்நாயக்கவுக்கின் தூக்கு தண்டனையை ரத்து செய்து அவருக்கு கருணை மன்னிப்பு வழங்கியுள்ளார் அதிபர் கோத்தபாய ராஜபக்சே. இதனையடுத்து சுனில் ரத்நாயக்க சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இது தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

English summary
Former Srilankan Army Staff Sergeant Sunil Ratnayake who was on death row has been granted a Presidential pardon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X