For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர்களை விடாமல் துரத்தும் மழை.. சென்னை போன்றே கிளிநொச்சியும் வெள்ளத்தில் மிதக்கிறது

By Veera Kumar
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை நாட்டின் கிளிநொச்சி பகுதியில் பெய்து வரும் கனமழையால் சென்னையைப்போல அந்த நகரமே நீரில் மிதக்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ளது கிளிநொச்சி. விடுதலை புலிகளின் கோட்டையாக விளங்கிய இடம் இது. தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள்.

இங்கு பெய்து வரும் கனமழையால் ஊரை சுற்றியுள்ள அனைத்து குளங்களுக்கும் நீர் வரத்து அதிகம் உள்ளது. எனவே, குளங்களில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. அங்குள்ள இரணைமடு, அக்கராயன், வன்னேரி, கரியாலை நாகபடுவான், குடமுருட்டி, புதுமுறிப்பு கனகாம்பிகை, கல்மடும் பிரமந்தலாறு ஆகிய குளங்கள், உடைய வாய்ப்பில்லை என்றும், தாழ்வான பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் எந்தவித பயமும் கொள்ளத்தேவையில்லை என கிளிநொச்சி நீர்பாசன பொறியியலாளர் குணரத்தினம் செந்தூரன் தெரிவித்து நிலையிலும், அச்சத்தின் காரணமாக, அக்குளங்களுக்கு 24 மணிநேர கண்காணிப்பு போடப்பட்டுள்ளது.

English summary
Heavy rain lashes out in northern part of Srilanka, especially in and around Killinochi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X