For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்போ இளைஞர்கள் கையில கல் இருந்தது! இப்போ பாருங்க கம்யூட்டர் இருக்கு! காஷ்மீரில் அமித் ஷா பெருமிதம்!

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர் : கடந்த காலங்களில் கைகளில் கற்களை பிடித்து வன்முறை பாதையில் சென்ற ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் கையில் கணினி மற்றும் வேலை வாய்ப்புகளை பிரதமர் மோடி வழங்கினார் என ஜம்மு காஷ்மிரில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்..

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா மூன்று நாள் சுற்றுப் பயணமாக ஜம்மு - காஷ்மீருக்கு சென்றிருக்கிறார். நேற்றும் இன்றும் ஜம்மு காஷ்மீரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.

முன்னதாக அமித் ஷா வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்ப்பட்டிருந்தனர். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடக்கும் பகுதிகள் முழுவதும் ராணுவம் மற்றும் உள்ளூர் போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.

ஜம்மு காஷ்மீரில் மொழி சிறுபான்மை பஹாரிகளுக்கு விரைவில் எஸ்.டி. இடஒதுக்கீடு: அமித்ஷா அதிரடி அறிவிப்புஜம்மு காஷ்மீரில் மொழி சிறுபான்மை பஹாரிகளுக்கு விரைவில் எஸ்.டி. இடஒதுக்கீடு: அமித்ஷா அதிரடி அறிவிப்பு

அமித் ஷா

அமித் ஷா

தனது பயணத்தில் ஒரு பகுதியாக காஷ்மீரின் குஜ்ஜார், பகாரி இனப் பிரதிநிதிகளுடனும், பாஜக நிர்வாகிகளுடனும் அமித் ஷா ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து ஜம்முவில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு நலத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக ஜம்மு - காஷ்மீரில் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் குறித்து துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவுடனும் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.

வன்முறை

வன்முறை

தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா," கடந்த காலங்களில் கைகளில் கற்களை பிடித்து வன்முறை பாதையில் சென்ற ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் கையில் கணினி மற்றும் வேலை வாய்ப்புகளை பிரதமர் மோடி வழங்கினார். கற்களைப் பிடித்த இளைஞர்கள் கையில் தற்போது கம்ப்யூட்டர் இருக்கிறது.

ஆர்டிகிள் 370

ஆர்டிகிள் 370

ஆர்டிகிள் 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீர் மக்கள் பல்வேறு அரசு திட்டங்களின் பலன்களை பெற்று வருகின்றனர். கடந்த சில மாதங்களில் ஜம்முவிற்கு 50 லட்சம் சுற்றுலாப் பயணிகளும் காஷ்மீருக்கு சுமார் 22 லட்சம் சுற்றுலா பயணிகளும் வந்திருக்கின்றனர். இது இதுவரை இல்லாத சாதனை. அந்த சாதனையை காஷ்மீர் படைத்திருக்கிறது. ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு சுற்றுலா பெரிய வகையில் உதவுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

இதற்கு முன்னதாக கற்களை எரியும் நிகழ்வுகள் நடந்தது. தற்போது எங்குமே இல்லை. அந்த அளவுக்கு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி இருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் தற்போது நல்ல மாற்றம் நடந்து வருகிறது. அதனை புரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு ஆதரவு தெரிவித்த ஆட்சியாளர்களை கண்டறிந்து அவர்களை நீக்கி இருக்கிறோம். அதனை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்" என பேசினார்.

English summary
Speaking in Jammu and Kashmir, Home Minister Amit Shah said with pride that Prime Minister Modi gave computers and job opportunities to the youth of Jammu and Kashmir who had taken the path of violence in the past with stones in their hands.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X