For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடுதலைப் புலிகளுடன் சமாதானத்தையே விரும்பினேன்: சொல்கிறார் சந்திரிகா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

I always wanted to talk to the LTTE: CBK
கொழும்பு: தமது ஆட்சி காலத்தின் போது, ராணுவ நடவடிக்கைகளைக்காட்டிலும் சமாதான வழிமுறைகளின் மூலமே விடுதலைப்புலிகளை அணுக முயற்சித்ததாக, இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

பெங்களூருவில் 6 வது சர்வதேச பெண்கள் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சந்திரிகா பேசியதாவது:

விடுதலைப்புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருந்தேன். எனது உயிரை பறிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும், காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனைகளை திறந்தேன்.

இலங்கையில் போர் காலத்தின் போது சமாதானமும், அதே நேரம் போர் பாதிக்கப்பட்ட இடங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்துகொண்டேன்.

தற்போது ஆட்சியில் உள்ள ராஜபக்சே அதிகாரத்தை தமது குடும்பத்துக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்.

இவ்வாறு சந்திரிகா பேசினார்.

English summary
Former Sri Lankan president Chandrika Bandaranaike Kumaratunga said she always tried her best for peace despite military conflict with the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in Sri Lanka during her tenure. Speaking at the sixth international women’s conference organised by the Art of Living (AOL) in Bangalore, Kumaratunge said
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X