For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே இரவில் 3.000 சிங்கள வீரர்களை கொன்றேன்..கருணாவின் ஒப்புதல் வாக்குமூலம்- கிடுக்குப்பிடி விசாரணை

Google Oneindia Tamil News

இலங்கை: தாம் கொரோனாவை விட கொடியவன் என்றும் ஒரே இரவில் 3,000 சிங்கள வீரர்களை கொலை செய்தவன் என்றும் கருணா பேசியிருப்பது இலங்கை அரசியலில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தற்போது போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது. கிழக்கு மாகாணமான அம்பாறையில் நடைபெற்ற பிரசாரத்தில் அண்மையில் கருணா பேசினர்.

உடுமலை ஆணவக்கொலை அப்பீல் வழக்கு தீர்ப்பு டைம் லைன்: 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்புஉடுமலை ஆணவக்கொலை அப்பீல் வழக்கு தீர்ப்பு டைம் லைன்: 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு

3,000 பேரை கொன்றவன்

3,000 பேரை கொன்றவன்

அப்போது, என்னை கொரோனாவை விட கொடியவன் என்கிறார்கள். ஆம் நான் கொரோனாவை விட கொடியவனே. கொரோனா இதுவரை 11 பேரை கொன்றிருக்கிறது. ஆனால் ஆனையிறவு போரில் ஒரே இரவில் 3,000 சிங்கள வீரர்களை கொலை செய்தவர்கள் நாங்கள் என்றார். கருணாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

விசாரணை கோரிக்கை

விசாரணை கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதியாக இருந்த காலத்தில் தாம் செய்த படுகொலைகளை கருணா பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆகையால் அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று சிங்கள கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் கருணா மீது விசாரணகளுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.

விசாரணைக்கு அழைப்பு

விசாரணைக்கு அழைப்பு

இதனிடையே கருணாவை குற்றப்பிரிவு புலனாய்வு போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை தேர்தல் நேரத்தில் கருணாவை விசாரணைக்கு அழைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கு பதில் தந்திருக்கும் கருணா, என்னை கைது செய்ய வேண்டும் என்று கூறுபவர்கள் யாரும் அப்பாவிகள் அல்ல என பதிலடி கொடுத்திருக்கிறார்.

என்னை கைது செய்ய முடியாது

என்னை கைது செய்ய முடியாது

இது தொடர்பாக கருணா கூறுகையில், என்னை கைது செய்ய வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கூறுகிறார். அவரது தந்தை பிரேமதாசதான், விடுதலைப் புலிகளுக்கு 5,000 ரைபில்கள், 1 லட்சம் துப்பாக்கி தோட்டாக்களை கொடுத்தவர் என்பதை வசதியாக மறந்துவிடக் கூடாது. இன்னொருவர் அனுராகுமார திசநாயக்க. இலங்கையில் 80,000 பேரை படுகொலை செய்த ஜேவிபி அமைப்பின் தலைவர் அவர். இவர்கள் எல்லாம் என்னை கைது செய்ய வேண்டும் என்கிறார்கள். அது நடக்காது என்றார் கருணா.

English summary
Karuna said that he killed 3,000 Sinhala soldiers in war against Srilankan Army.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X