For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை வடகிழக்கில் 40,000 வீடுகள் கட்டும் சீனா- இந்தியா அதிருப்தி

இலங்கையின் வடகிழக்கில் 40,000 வீடுகள் கட்ட சீனா நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கையில் 40,000 வீடுகள் கட்டும் சீனா | சுடுகாட்டில் தூங்கிய எம்.எல்.ஏ- வீடியோ

    யாழ்ப்பாணம்: இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 40,000 வீடுகளை சீனா நிறுவனம் கட்ட அனுமதி அளித்துள்ளதற்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது.

    இலங்கையில் தென்பகுதியில் ஏராளமான சீனா நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டா துறைமுகத்தையும் சீனா விரிவாக்கம் செய்திருக்கிறது.

    India expresses concern over Chinese housing project in Sri Lanka’s north-east

    இது குறித்து இந்தியா ஏற்கனவே இலங்கையிடம் கவலை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது தமிழர்களின் தாயக பிரதேசமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 40,000 வீடுகளை கட்டும் ஒப்பந்தத்தை சீனா நிறுவனம் பெற்றுள்ளது.

    ஏற்கனவே வடக்கு கிழக்கில் இந்திய அரசு வீடுகளை கட்டி வருகிறது. தற்போது சீனா நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கு இந்தியா, இலங்கையிடம் அதிருப்தியையும் கவலையையும் வெளிப்படுத்தி இருக்கிறது.

    English summary
    India has raised concern to Sri Lankan Government about the contract to build 40,000 houses in the North and East was awarded to a Chinese company.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X