For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாழ். பலாலியை தொடர்ந்து மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச தரத்துக்கு விரிவுபடுத்துகிறது இந்தியா

Google Oneindia Tamil News

யாழ்ப்பாணம்: இலங்கையின் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தைப் போல மட்டக்களப்பு விமான நிலையத்தையும் விரிவுபடுத்த இந்தியா முன்வந்துள்ளதாக இலங்கை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.

இலங்கையில் ஈழத் தமிழர்களின் தாயகப் பகுதியான வடக்கு கிழக்கில் இந்திய அரசு பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகிறது. பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக விரிவாக்கம் செய்தது இந்தியா.

India expresses interest in international connectivity to Srilankas Batticaloa Airport

இதனையடுத்து இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் பலாலிக்கு நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு விமான நிலையத்தையும் விரிவுபடுத்த இந்தியா முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக இலங்கை விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறுகையில், இலங்கைக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்துவை சந்தித்து பேசிய போது மட்டக்களப்பு பயணிகள் சேவையை தொடங்க இந்தியா ஆர்வமாக இருக்கிறது என கூறினார்.

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக விஸ்வரூபம் எடுக்கும் கோலப் போராட்டம்- விசிக, காங். களமிறங்கினசி.ஏ.ஏ.வுக்கு எதிராக விஸ்வரூபம் எடுக்கும் கோலப் போராட்டம்- விசிக, காங். களமிறங்கின

மட்டக்களப்பு விமான நிலையம், சர்வதேச விமான நிலையத்துக்கான வசதிகளுடன் விரிவுபடுத்தப்படும். இதற்கான உதவிகளை இந்தியா வழங்கும் என்றார்.

English summary
Srilanka Minister of Aviation Prasanna Ranatunga said that the Batticaloa Airport will be developed as an international airport with the Indian government cooperation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X