For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை குண்டு வெடிப்பு.. சில மணி நேரங்கள் முன்பே எச்சரித்த இந்திய உளவுத்துறை.. வெளியான புது தகவல்

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் குண்டுவெடிப்புகள் நிகழப்போவது குறித்து, சில மணி நேரங்கள் முன்பாக கூட இந்திய உளவுத்துறை எச்சரிக்கைவிடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 321 பேர் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், தாக்குதல் தொடர்பாக இந்திய உளவுத்துறை முன்கூட்டியே எச்சரித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Indian intelligence warned Sri Lanka over bomb attack

இதுகுறித்து இலங்கை உளவுத்துறை வட்டாரங்கள் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த தகவல்படி, இந்திய உளவுத்துறை, சனிக்கிழமை இரவே, இலங்கையில் நடைபெற்ற திட்டமிட்ட தாக்குதல் தொடர்பான தகவலை அளித்ததாக கூறப்படுகிறது.

மற்றொரு உளவுத்துறை அதிகாரி கூறுகையில், தேவாலயங்களை குறிவைத்து இலங்கையில் தாக்குதல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது என்பது தொடர்பாக எங்களுக்கு இந்திய உளவுத்துறை தகவல் அளித்தது. முதல் தாக்குதல் நடைபெறுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக கூட, இந்த தகவல் எங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஈஸ்டர் நாள் தாக்குதல்.. இது முதல் முறையல்ல.. ரத்தம் சிந்திய கிறிஸ்தவர்களின் வரலாறு! ஈஸ்டர் நாள் தாக்குதல்.. இது முதல் முறையல்ல.. ரத்தம் சிந்திய கிறிஸ்தவர்களின் வரலாறு!

இலங்கையில் நடைபெற்ற தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இலங்கையை சேர்ந்த தேசிய ஜவ்ஹீத் ஜமாஅத் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 7 பேர் தற்கொலைப்படையினராக செயல்பட்டதாக தெரியவந்துள்ளது.

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் மசூதிகளுக்குள் புகுந்து கிறிஸ்தவ வலதுசாரி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு பதிலடியாக இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக இலங்கை அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Sri Lankan intelligence officials were given imputs by Indian intelligence officers about an imminent attack by terrorists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X