For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலிகள் இயக்க நெடியவன், விநாயகத்தை இண்டர்போல் உதவியுடன் கைது செய்ய இலங்கை தீவிரம்!!

By Mathi
Google Oneindia Tamil News

Interpol on Lookout for LTTE Operative Hiding in France
கொழும்பு: வெளிநாடு வாழ் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர்களான நெடியவன், விநாயகம் ஆகியோரை இண்டர்போல் உதவியுடன் கைது செய்ய இலங்கை அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறது என்கிறது இலங்கை அரசு. அண்மையில் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டனர் எனக் கூறி புலிகள் இயக்கத்தின் கோபி, தேவியன் மற்றும் அப்பன் ஆகியோரை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது. அத்துடன் அவர்களுக்கு துணையாக இருந்ததாக 65 ஈழத் தமிழரையும் கைது செய்துள்ளது. அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.

இந்நிலையில் இலங்கை அரசு வெளிநாட்டில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க முக்கிய பொறுப்பாளர்களான நெடியவன், விநாயகம் ஆகியோரை கைது செய்து இலங்கைக்கு நாடு கடத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவர்கள் இருவர் தொடர்பாக இண்டர்போல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது. இந்த தகவலை இலங்கை போலீஸ்துறை செய்தித் தொடர்பாளர் அஜித ரோகண தெரிவித்திருக்கிறார்.

English summary
Interpol is on the lookout for France-based Tamil Tiger leader Vinayagamoorthy alias Vinayagam, at the request of the Sri Lankan government, Lankan police spokesman, Ajith Rohana, told on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X