For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

320க்கும் அதிகமானோரை பலிவாங்கிய இலங்கை குண்டுவெடிப்பு.. ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு.. திருப்பம்!

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்று இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கை குண்டுவெடிப்பில் புது திருப்பம்: ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பு- வீடியோ

    கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்று இருக்கிறது. ஐஎஸ் இயக்கத்தின் அமாக் இணைய பக்கத்தில் இந்த தகவல் வெளியாகி உள்ளது .

    கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் அன்று இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 320க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

    இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இதில் 450 பேர் காயம் அடைந்தனர்.

    உளவுத்துறை எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டோம்.. மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு உளவுத்துறை எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டோம்.. மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு

    யாரும் இல்லை

    யாரும் இல்லை

    ஆனால் இலங்கையில் இவ்வளவு பெரிய தாக்குதல் நடந்தும் அதற்கு யாரும் பொறுப்பேற்காமல் இருந்தனர். கிட்டத்தட்ட தாக்குதல் நடந்து 48 மணி நேரம் தாண்டியும் இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காமல் இருந்தனர். இதனால் பெரிய குழப்பம் நீடித்து வந்தது.

    என்ன சொன்னார்கள்

    என்ன சொன்னார்கள்

    அதன்பின் இலங்கையில் இது தொடர்பாக நிறைய தகவல்கள் வெளியானது. நியூசிலாந்து கிறிஸ்ட் சர்ச் பகுதியில் மசூதியில் நடந்த தாக்குதலுக்கு பதிலடிதான் இந்த தாக்குதல் என்றும் இலங்கை அமைச்சர்கள் தெரிவித்தார்கள். இதற்கு பின் வெளிநாட்டு சதி இருக்கிறது என்றும் கூறி இருக்கிறார்கள்.

    பொறுப்பேற்பு

    பொறுப்பேற்பு

    இந்த நிலையில் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்று இருக்கிறது. ஐஎஸ் அமைப்பின் இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட் லெவண்ட் குழு இதற்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

    எப்படி

    ஐஎஸ் அமைப்பின் இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட் லெவண்ட் இயக்கத்தின் அமாக் இணைய பக்கத்தில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக இதுவழியாகத்தான் ஐஎஸ் அமைப்பு தீவிரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பேற்கும். இந்த செய்தியால் தற்போது இலங்கை தாக்குதலில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    English summary
    Islamic State claims responsibility for Sri Lanka bomb blast through its Amaq news agency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X