For Daily Alerts
மோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா? தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்
யாழ்ப்பாணம்: தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டதைத் கண்டித்து யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 13 தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது உலகத் தமிழர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழர்கள் வாழும் நாடுகளில் இப்படுகொலையைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இலங்கையில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில், மோடி அரசே! தமிழகத்திலா உன் சூட்டு பயிற்சி? சுட்டுப் பழக தமிழர் என்ன கைப்பொம்மையா? தமிழக ஆட்சியில் தமிழன் என்ன பலி ஆட்டுக் கூட்டமா? ஆகிய முழக்கங்கள், பதாகைகளுடன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.