For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கே.பி, கருணா மீது நடவடிக்கை: சரத் பொன்சேகா

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாபன் என்ற கே.பி மற்றும் விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுத்த கருணா ஆகியோர் மீது விசாரணை நடத்தப்படும் என்று இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து வெளியாகும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு சரத் பொன்சேகா அளித்துள்ள பேட்டியில், கே.பி மற்றும் கருணா இருவரும் முக்கிய தீவிரவாதிகள்.

KP and Karuna have to be tried - Fonseka

அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கே.பி. மூலமாக விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான டன் கணக்கிலான தங்கம் மற்றும் பெருமளவு பணம் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால்தான் முந்தைய ராஜபக்சே அரசு, கே.பி. மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து கே.பி., கருணா ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

English summary
Leader of the Democratic Party (DP) Sarath Fonseka says that former LTTE leaders such as Kumaran Pathmanathan and Vinayagamoorthy Muralitharan would have to face legal action as they were once "hardcore terrorist" and that a probe will be launched into the whereabouts of seized LTTE assets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X