For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை ராணுவ ஜெனரல் கொலை: விடுதலைப்புலிக்கு 20 ஆண்டு சிறை!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ltte
கொழும்பு: இலங்கை ராணுவ ஜெனரல் கொலை வழக்கில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

இலங்கை ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பணியாற்றியவர் ஜனக பெரேரா. இவர், விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த பல்வேறு தாக்குதல்களில் பங்கேற்றவர்.

ராணுவத்தில் இருந்து பணி ஓய்வு பெற்ற பின்னர் பெரேரா, பிரதான எதிர்க்கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த வடக்கு மத்திய மாகாண தேர்தலில், எதிர்க்கட்சியின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட ஜனக பெரேரா, விடுதலைப்புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியானார்.

மேலும், அந்த தாக்குதலில் அவரது மனைவி உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பான வழக்கு இலங்கை அனுராதபுரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் அந்த வழக்கில் தொடர்புடைய விடுதலைப்புலி ஒருவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும், அந்த விடுதலைப்புலியின் பெயர் வெளியிடப்படவில்லை.

English summary
A former LTTE cornel Shanmuganadan Sudaharan who pleaded guilty for the murder of 29 persons including Major General Janaka Perera was sentenced to 20 years rigorous imprisonment by the Anuradhapura High Court today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X