For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீச்சீ.. செல்போன் சுவையாவே இல்ல.. கடித்து பார்த்து ஏமாந்த குரங்குகள்.. பிறகு செய்தது தான் அல்டிமேட்!

தொலைந்து போன தனது செல்போனில் குரங்குகளின் செல்பி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதை கண்டு மலேசிய நபர் அதிர்ச்சி அடைந்தார்.

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: தொலைந்து போன தனது செல்போனில் குரங்குகள் செல்பி எடுத்திருப்பதைக் கண்டு, அந்த போனின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்த சம்பவம் மலேசியாவில் நடந்துள்ளது.

மலேசியாவின் ஜோகர் மாநிலத்தில் உள்ள பட்டு பாகத் எனும் இடத்தை சேர்ந்தவர் சக்ரிட்ஸ் ரோசி. 20 வயதாகும் சக்ரிட்ஸ் அந்த ஊரில் உள்ள கல்லூரியில் இறுதி ஆண்டு கணினி அறிவியல் பட்டப் படிப்பு படித்து வருகிறார்.

சக்ரிட்ஸ் ரோசியின் செல்போன் இரு தினங்களுக்கு முன்பு தொலைந்து போய்விட்டது. இரவு தூங்க சென்றபோது அருகில் இருந்த செல்போன் காலையில் மாயமாக மறைந்துவிட்டது. எங்கு தேடியும் செல்போன் கிடைக்கவில்லை.

 கொரோனாவிற்கு பயந்து வீட்டிற்குள் இருந்த கமல் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு போகிறார் - ஜெயக்குமார் கொரோனாவிற்கு பயந்து வீட்டிற்குள் இருந்த கமல் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு போகிறார் - ஜெயக்குமார்

குரங்கால் சந்தேகம்

குரங்கால் சந்தேகம்

இந்நிலையில் மறுநாள் காலையில் அவரது வீட்டு பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் குரங்கு ஒன்று சுற்றி திரிவதை ரோசியின் தந்தை பார்த்திருக்கிறார். திடீரென மனதில் ஒரு சந்தேகம் கிளம்ப, தனது செல்போனில் இருந்து மகனின் செல்போனுக்கு கால் செய்தார். அப்போது அந்தக் குரங்கு இருந்த இடத்தின் அருகே இருந்து செல்போன் ரிங்காகும் சத்தம் கேட்டிருக்கிறது.

செல்பி

செல்பி

உடனே தந்தையும் மகனும் அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது, ஒரு பனை மரத்துக்கு அருகில் செல்போன் கிடந்தது. இடையடுத்து அந்த போனை அவர்கள் எடுத்து சுத்தம் செய்து பார்த்தனர். அப்போது அந்த செல்போனில் குரங்கின் செல்பி போட்டோக்களும், வீடியோக்களும் நிரம்பி இருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வைரல்

வைரல்

அந்த வீடியோவில் முதலில் அந்த செல்போனை ஏதோ சாப்பாட்டு பொருள் என நினைத்து குரங்கு திங்க பார்க்கிறது. ஆனால் அது முடியாததால், அதை வைத்து விளையாட ஆரம்பித்துவிட்டது. இந்த வீடியோக்களை ரோசி தனது சமூகவலைதளத்தில் பகிர, அவை வைரலாகிவிட்டன.

குரங்குகளும் கூடவா?

குரங்குகளும் கூடவா?

மனிதர்கள் தான் செல்பி மோகத்திற்கு அடிமையாகக் கிடக்கிறார்கள் என்றால், குரங்குகளும் இப்படி செல்போனைப் பார்த்ததும் செல்பிக்களாக எடுத்துத் தள்ளியுள்ளதே என நெட்டிசன்கள் ஆச்சர்யப் பட்டுள்ளனர். இதற்கு முன்னரும் இதே போன்ற சம்பவங்கள் பல நடந்துள்ளன. இந்த வீடியோவைப் பார்த்த சிலர் அதனையும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

English summary
A man in Malaysia was really surprised to see selfie photos and videos of in his phone which he lost.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X