For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் தலைமையில் 'ஐக்கிய தேசிய முன்னணி' உதயம்! சிறிசேன ஆதரவு!!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மீண்டும் அரசியல் பிரவேசம் மேற்கொண்டிருக்கும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் 'ஐக்கிய தேசிய முன்னணி' உதயமாகியுள்ளது. இதற்கு அதிபர் மைத்ரிபால சிறிசேன ஆதரவளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்த மகிந்த ராஜபக்சே பல மாதங்களாக தீவிர அரசியலைவிட்டு ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 17-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

MOU to form the United National Front for Good Governance in Sri Lanka signed
இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் மகிந்த ராஜபக்சே, குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட உள்ளார். ஆனால் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பி.க்கள் பலரும் ராஜபக்சேவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த அதிருப்தியாளர்கள் அனைவரும் வரும் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி சின்னமான யானை சின்னத்தில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளர்கள், ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி, ஜாதிக ஹெல உறுமய, மற்றும் இடதுசாரிக் கட்சிகள் ஆகியவை இணைந்து ஐக்கிய தேசிய முன்னணி என்ற புதிய கூட்டமைப்பையும் உருவாக்கி உள்ளனர். இந்த கூட்டணிக்கான ஒப்பந்தத்தில் கொழும்பில் நேற்று ராஜபக்சே எதிர்ப்பாளர்கள் கையெழுத்திட்டனர்.

இந்த புதிய கூட்டணிக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேன முழு ஆதரவை அளித்துள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
The coalition partners, who contributed to the victory of January 8th election of President Maithripala Sirisena, have come forward to contest the upcoming parliamentary elections with the United National Party (UNP)as a new front and accordingly, have formed the United National Front for Good Governance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X