For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையை உலுக்கிய பயங்கர குண்டுவெடிப்பு.. 8 இடங்களில் தாக்குதல்.. 207 பேர் பலியான பரிதாபம்!

இலங்கையில் அடுத்தடுத்து இரண்டு தேவாலயங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள், இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

    கொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் திருநாளான இன்று அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் மற்றும் 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது. இந்த குண்டுவெடிப்பில் 207க்கும் அதிகமானோர் பலியானார்கள். இதில் 450க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    இன்று உலகம் முழுக்க ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்தெழுந்ததை கொண்டாடும் வகையில் இன்று உலகம் முழுக்க ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில் ஈஸ்டர் பண்டிகையை அடுத்து கிறிஸ்துவர்கள் நேற்று இரவு தேவாலயங்களில் சென்று வழிபட்டார்கள். அதேபோல் இன்று காலையும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் தேவாலயங்களில் சென்று வழிபாடு நடத்தினார்கள்.

    இலங்கையில் சர்ச்

    இந்த நிலையில்தான் இன்று இலங்கையில் சர்ச்சில் மக்கள் வழிபாடு நடத்திக் கொண்டு இருக்கும் போது அங்கு வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்று உள்ளது. மொத்தம் இலங்கையில் 3 சர்ச் மற்றும் 3 தனியார் ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

    எங்கு எல்லாம்

    எங்கு எல்லாம்

    கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச்சில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அதேபோல் நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியிலும் ஒரு சர்ச்சில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. மேலும் மேலும் மட்டக்களப்புசர்ச் ஆகிய இடங்களில் குண்டுவெடித்துள்ளது. மூன்றுமே கொழும்பில் உள்ள மிக முக்கியமான கிறிஸ்துவ தேவாலயங்கள் ஆகும்.

    ஹோட்டலிலும்

    ஹோட்டலிலும்

    மேலும் சின்னமன் கிராண்ட் ஹோட்டல்,கிங்ஸ்பெரி ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது. இந்த குண்டு வெடிப்பில் 450 நபருக்கும் மேல் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்கள்.

    என்ன

    என்ன

    குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இலங்கை ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பிற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டுவெடிப்பில் 207க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 450க்கும் அதிகமானோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

     இன்னொரு ஹோட்டல்

    இன்னொரு ஹோட்டல்

    இந்த நிலையில் 6 மணி நேரங்களுக்கு பிறகு இன்னும் இரண்டு ஹோட்டல்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடித்துள்ளது. தெய்வாலா மிருகக்காட்சி சாலைக்கு எதிராக இருக்கும் ஹோட்டலில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் இரண்டு பேர் பலியானார்கள். அதன்பின் டிமாட்டகொடா பகுதியிலும் இன்னும் குண்டு வெடித்துள்ளது. ஆனால் இதில் எத்தனை பேர் பலியானார்கள் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    English summary
    A series of the bomb blast in 2 Churches: Many feared death in Sri Lanka on the day of Ester.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X