For Daily Alerts
Just In
அமெரிக்காவின் கடும் எதிர்ப்பால் சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவியும் மறுப்பு!
கொழும்பு: அமெரிக்காவின் கடுமையான எதிர்ப்பால் இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவியும் மறுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்புத் துறை இணை அமைச்சராக ருவான் விஜேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று மாலை பதவியேற்றது. புதிய அமைச்சரவையில் மொத்தம் 45 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சராக மங்கள சமரவீரவும் பாதுகாப்புத் துறை இணை அமைச்சராக ருவான் விஜேவர்த்தனவும் பதவியேற்றனர்.