For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்றத் தேர்தல் முடியும்வரை ஊமையாக இருக்க விரும்புகிறேன்: வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்

By Mathi
Google Oneindia Tamil News

யாழ்ப்பாணம்: நாடாளுமன்றத் தேர்தல் முடியும்வரை ஊமையாக இருக்க விரும்புவதாக இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்துக்கு வரும் 17-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

Northern Province CM to remain neutral at Sri Lanka election

தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் இழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான கட்சியாக போட்டியிட்டாலும் வேறு சில தமிழ்க் கட்சிகளும் களமிறங்கியுள்ளன.

இதனிடையே நாடாளுமன்றத் தேர்தலில், தம்மை முதல்வராக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விக்னேஸ்வரனிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது, நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை நான் ஊமையாகவே இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

English summary
The chief minister of the Srilanka's Northern Province, C V Wigneswaran has said that he would remain neutral and non-partisan during general election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X