For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை வருகிறார் நார்வே முன்னாள் சமானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம்

By Mathi
Google Oneindia Tamil News

ஆஸ்லோ: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே சமாதான தூதராக செயல்பட்ட நார்வே முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இலங்கை செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து வெளிவரும் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு எரிக் சொல்ஹெய்ம் அளித்த பேட்டி:

நான் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இலங்கைக்கு வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

Norwegian Peace Envoy Erik Solheim ready to visit to Srilanka

இலங்கைத்தீவு முழுவதிலும் துரிதமான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை அடைவதற்கான ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுப்பதற்காக இலங்கை அரசுடனும் புலம்பெயர் தமிழர்களுடனும் சர்வதேச சமூகத்துடனும் இணைந்து கடுமையாகப் பணியாற்றுவேன்.

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் அவசியமாக உள்ளன. இலங்கையில் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டினால்தான் மிகத்துரிதமாக நாடு அபிவிருத்தியடையமுடியும்.

இவ்வாறு எரிக் சொல்ஹெய்ம் கூறினார்.

English summary
A Norwegian politician Erik Solheim known for facilitating a peace initiative between the LTTE and the Sri Lankan government a decade ago, said he is ready to visit to Srilanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X