For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போர்க்குற்றவாளி புகார் குறித்து கவலைப்படவில்லை: சேனல் 4 கேள்விக்கு ராஜபக்சே பதில்

Google Oneindia Tamil News

‘Not concerned’, Rajapaksa tells Channel 4 crew
கொழும்பு: போர்க்குற்றவாளி என தன் மீது சுமத்தப் படும் குற்றச்சாட்டுக் குறித்துக் கவலைப் படவில்லை எனத் தெரிவித்துள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்சே.

தனி ஈழம் வேண்டி இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் லட்சக் கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இக்குற்றத்திற்காக இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதன் மூலம் போர்க் குற்றத்தில் இருந்து ராஜபக்சே தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருப்பதாலேயே, அம்மாநாட்டை புறக்கணிக்கும் படி தங்கள் நாடுகளைப் பலர் வற்புறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தன் மீது கூறப்படும் போர் குற்றவாளி குற்றச்சாட்டு குறித்து கவலைப் படவில்லை என இங்கிலாந்தை மையமாக கொண்ட சேனல் 4 டெலிவிசனுக்கு அளித்த பதிலில் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் மாநாடு குறித்த செய்தி சேகரிப்பதற்காக சேனல் 4 டெலிவிசன் குழு கொழுப்பு சென்றுள்ளது. அப்பொது அங்கிருந்த ஓட்டலில் இருந்து வெளியே வந்த போது ராஜபக்சேவிடம் சேனல்4ன் நிருபர் போர்க்குற்றவாளி குற்றாச்சாட்டுக் குறித்தான கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலளித்த ராஜபக்சே, ‘தன் மீது சுமத்தப் பட்டுள்ள போர்க்குற்றவாளி குற்றச்சாட்டுக் குறித்து தான் கவலைப் படவில்லை என்றார்.

மேலும், காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்காதது ஏன் எனக் கேட்கப் பட்ட கேள்விக்கு ராஜபக்சே பதில் அளிக்க மறுத்து விட்டார்.

English summary
Sri Lankan President Mahinda Rajapaksa said he was not concerned about allegations of war crimes against him, in a rather sudden, chance encounter with the Channel 4 crew that is here to cover the Commonwealth summit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X