For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புலிகள் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் கதாநாயகன்: கோத்தாபய ராஜபக்சே

By Veera Kumar
Google Oneindia Tamil News

கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே, வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கதாநாயகனாக திகழ்ந்தார் என முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சே தெரிவித்துள்ளது இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் கோத்தாபய ராஜபக்சே. அதில் அவர் கூறியதாவது: பேருக்கு பிறகு நடந்த பொதுத் தேர்தலின்போது, வடக்கு மாகாணத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் வாக்களித்தனர். பிரபாகரனை தமிழ் மக்கள் கொண்டாடியதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

Prabhakaran was a hero among Tamil people: Gotabaya Rajapakse

இலங்கையின் வடக்கு பகுதிகளில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது தமிழ் மக்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. அங்குள்ள மக்கள் பிரபாகரனால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள். எனவே அங்குள்ள மக்களின் கதாநாயகனாகவே பிரபாகரன் திகழ்ந்தார்.

ராஜபக்ச ஆட்சியை வெளிப்படையாக கண்டிக்கும் வகையிலேயே, மக்கள் உங்களைத் தோற்கடித்தனர் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

English summary
LTTE chief Prabhakaran was a hero among Tamil people says Srilanka's former security secretary Gotabaya Rajapakse.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X