For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'பிரபாகரன் இறந்ததற்கான உரிய ஆதாரங்களை இலங்கை வெளியிடவில்லை': மூத்த வழக்கறிஞர் தவராசா

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு சட்டப்பூர்வமாக எந்தவித ஆதாரங்களையும் வெளியிடவில்லை என்று இலங்கையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

Senior Tamil Lawyer K.V. Reveals the Evidences about the LTTE leader

ஆனால் பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு சட்டப்பூர்வமாக எந்தவித ஆதாரங்களையும் காட்டவில்லை என்று இலங்கையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.தவராசா கூறியுள்ளார்.

இது தொடர்பாக லங்காசிறி என்ற வானொலிக்கு தவராசா அளித்த பேட்டியில், விடுதலைப்புலிகளின் தலைவரின் மரணம் தொடர்பாக இலங்கை அரசு தரப்பில் குழப்பம் இருக்கிறது. அவர்கள் கூறியதற்கான ஆதாரங்களை இதுவரை இலங்கை அரசு வெளியிடவில்லை.

ஆனால் இந்த விஷயத்தில் தமிழர்கள் குழம்பவில்லை. பல அரசியல் தலைவர்கள்தான் குழம்பிப் போயுள்ளனர்.

இவ்வாறு தவராசா தெரிவித்துள்ளார்.

English summary
The Eelam Senior Counsel K.V. Thavarasa has said that during the end time war, the Sri Lankan Government has not at all released any authenticated evidences to prove legally that the LTTE Leader V. Prabhakaran had died in the war.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X