For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரிவாளால் நறுக்கப்பட்ட 'அதை'.. மீண்டும் ஒட்டி இயங்கவும் வைத்து உலக சாதனை!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: அரிவாளால் தனியே வெட்டி எடுக்கப்பட்ட ஆண் உறுப்பை மீண்டும் ஒட்டி இயங்க வைத்து உலக சாதனை ஆபரேஷனை செய்துள்ளனர் இலங்கை மருத்துவர்கள்.

இலங்கை புத்தளத்தைச் சேர்ந்த 27 வயது நபர் ஒருவர் திருமணமானவர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் திடீரென வீட்டில் இருந்த அரிவாளால் தமது ஆண் உறுப்பை விந்தகத்துடன் வெட்டி எடுத்துள்ளார்.

இதைக் கண்டு அலறிய அவரது மனைவி உறவினர்கள் உதவியுடன் முதலில் புத்தளம் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மரணம் ஏற்படாதாம்

மரணம் ஏற்படாதாம்

ஆண் உறுப்பு துண்டிக்கப்பட்ட உடனேயே மரணம் ஏற்பட்டு விடும் என்பது பொது கருத்து. ஆனால் விந்தகத்தின் மீது பலமான தாக்குதல் நடத்தினால்தான் மரணம் உடனே நேரிடும். என்கிறார்கள்.

9 பேர் குழு

9 பேர் குழு

இதனால் 9 பேர் கொண்ட மருத்துவர் குழு ஆண் உறுப்பை இணைக்கும் ஆபரேஷனில் களம் இறங்கியது.

சிறுநீர் குழாய்

சிறுநீர் குழாய்

முதலில் விந்தகம், ஆண் உறுப்புடன் சிறுநீர் குழாய் இணைக்கப்பட்டது. அதற்கு பின்னர் இதர நரம்பு தொகுதிகள் ஒவ்வொன்றாக இணைக்கபட்டன.

12 மணி நேர ஆபரேஷன்

12 மணி நேர ஆபரேஷன்

மொத்தம் 12 மணி நேரம் ஆபரேஷன் நடத்தி திங்கள்கிழமையன்று வெற்றிகரமாக ஆண் உறுப்பை ஒட்ட வைத்து இயங்கவும் வைத்துவிட்டனராம். உலகிலேயே இப்படியான ஒரு ஆபரேஷன் முதல்முறையாக நடந்துள்ளதாக பெருமைப்பட்டுக் கொள்கின்றனர் கொழும்பு மருத்துவர்கள்.

இயங்கும்..ஆனால்..

இயங்கும்..ஆனால்..

இருப்பினும் வெட்டி எடுக்கப்பட்டு பின்பு ஒட்ட வைக்கப்பட்ட ஆண் உறுப்பு முன்பு போலவே இயங்காது.. என்பது மருத்துவர்கள் கருத்து. தற்போது அந்த நபருக்கு தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம்.

English summary
In a 12-hour operation carried out by a team of doctors in the plastic surgery section of the Colombo National Hospital a completely severed penis was successfully rejoined. The operation was performed on 27-year-old man, a father of one child.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X