For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை பாதுகாப்பு செயலாளர் பதவி: கோத்தபாய விலகுகிறார்! பொன்சேகா பொறுப்பேற்கிறார்!!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் பதவியில் இருந்து அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே விலகுகிறார். அவருக்குப் பதில் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா அப்பதவியில் நியமிக்கப்பட இருக்கிறார்.

இலங்கை அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா வென்றுள்ளார். இதனையடுத்து இலங்கையின் 7வது அதிபராகியுள்ளார் மைத்ரிபால சிறிசேன.

Shirani as CJ, Fonseka to be defence secretary?

இந்த நிலையில் இலங்கையில் அதிகாரம் மிக்க பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருந்து வரும் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய பதவி விலக இருக்கிறார். அவருக்குப் பதில் இலங்கையில் இறுதிப் போரை நடத்தியவரும் அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனவை ஆதரித்தவருமான முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா நியமிக்கப்பட இருக்கிறார்.

இதேபோல் ராஜபக்சேவால் நீக்கப்பட்ட உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சிராணி பண்டாரநாயக்க மீண்டும் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட இருப்பதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
After Maithripala Sirisena's induction in office as the next president, as per his election promises, he will reinstate Shirani Bandaranayake as the chief justice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X