For Daily Alerts
Just In
வன்முறைகளுக்கு கண்டனம்: யாழ், மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம்
யாழ்ப்பாணம்: அம்பாறை, கண்டியில் முஸ்லிம்கள் மீதான வன்முறைகளைக் கண்டித்து யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
அம்பாறை, கண்டியில் முஸ்லிம்கள் மீது சிங்களர்கள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். முஸ்லிம்களின் வர்த்தக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இதையடுத்து இலங்கை முழுவதும் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள் 3 நாட்களுக்கு முடக்கப்பட்டிருக்கிறது.
முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் இத்தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முஸ்லிம்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.
மன்னாரில் முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களுக்கு ராணுவ பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!