For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர் கழுத்தை அறுப்பேன் என மிரட்டிய சிங்கள ராணுவ அதிகாரியை சஸ்பென்ட் செய்வதா? சிறிசேன பாய்ச்சல்

லண்டனில் ஈழத் தமிழர்களது கழுத்தை அறுத்து போடுவேன் என மிரட்டிய சிங்கள ராணுவ அதிகாரியை சஸ்பென்ட் செய்ததற்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஈழத் தமிழர்களை கொலை செய்வேன் என பகிரங்கமாக மிரட்டிய சிங்கள ராணுவ அதிகாரி- வீடியோ

    கொழும்பு: லண்டனில் ஈழத் தமிழர்களது கழுத்தை அறுத்து போடுவேன் என மிரட்டிய சிங்கள ராணுவ அதிகாரியை சஸ்பென்ட் செய்ததற்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஈழத் தமிழர்கள். அவர்களை இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் ராணுவ அதிகாரி பெர்னாண்டோ கழுத்தை அறுத்து வீசுவோம் என சைகையில் மூன்று முறை மிரட்டினார்.

    Sirisena supports Sri Lankan military official Fernando

    இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையானது. பெர்னாண்டோவை இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த வேண்டும் என அந்நாட்டு எம்பிக்கள் வலியுறுத்தினர்.

    இதையடுத்து பெர்னாண்டோவை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் சஸ்பென்ட் செய்தது. ஆனால் இந்த சஸ்பென்ட் உத்தரவை அதிபர் மைத்ரிபால சிறிசேன ரத்து செய்தார்.

    அத்துடன் சஸ்பென்ட் உத்தரவை பிறப்பித்தவர்கள் மீதும் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார் சிறிசேனா. இதனிடையே சிங்கள ராணுவ அதிகாரியின் கொலை மிரட்டல் பிரிட்டன் சட்டப்படி குற்றம் என மூத்த பத்திரிகையாளர் கெல்லும் மக்ரே கூறியுள்ளார்.

    English summary
    Colombo News Papers pointed out that Srilankan President Maithripala Sirisena is supporting Controversila Srilankan Military officila who made threaten Tamils in London.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X