For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிளிநொச்சி அருகே திடீரென ராணுவம் குவிப்பு.. சோதனைகள்.. பதற்றத்தில் மக்கள்

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில், கிளிநொச்சி அருகேயுள்ள, முக்கொம்பன் கிராமத்தில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதத்தில், ஈஸ்டர் திருவிழாவில் பல்வேறு தேவாலயங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் சுமார் 250 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. ஆனால், தமிழகத்திலிருந்து அந்த அமைப்புக்கு சிலர் துணை போனதாக, அந்த நாட்டு ராணுவம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.

Sri Lanka army raids Kilinochchi

இந்த நிலையில், கிளிநொச்சி அருகேயுள்ள முக்கொம்பன் கிராமத்தில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். நேற்று அதிகாலை முதல் இவ்வாறான சூழல் அங்கு நிலவுகிறது. அந்த கிராமத்தை மட்டும் ஏன் குறி வைத்து சோதனை நடக்கிறது என தெரியவிலி்லை.

திடீரென நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் முக்கொம்பன் கிராமத்தில் சோதனை நடத்தியதால், மக்கள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறது.

கிளிநொச்சி விடுதலை புலிகள் ஆதிக்கத்தில் இருந்தபகுதி. தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில், ராணுவத்தின் இந்த திடீர் குவிப்பும், சோதனைகளும் ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளன.

English summary
Sri Lanka army raids Kilinochchi where Tamil people living in large number.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X