For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மன்மோகன்சிங் யாழ். வருவதை கடுமையாக எதிர்ப்போம்: ரணில் கட்சி அறிவிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: பிரதமர் மன்மோகன்சிங் யாழ்ப்பாணம் செல்வதை மிகக் கடுமையாக எதிர்ப்போம் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சியான ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அந்த கட்சியின் எம்.பி. ஜான் அமரதுங்க, வடக்கு மாகாண முதலமைச்சரின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் இலங்கை வரவுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Sri Lanka opposition against Manmohan Singh visiting Jaffna

இலங்கையில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே விடுத்த அழைப்பை ஏற்காத இந்திய பிரதமர், வடக்கு மாகாண முதலமைச்சரின் அழைப்பை ஏற்று அங்கு செல்வதற்காக இலங்கை வந்தால், அதனை ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கும். இதுபோன்ற அழைப்புகளை நாட்டின் அதிபர்தான் விடுக்கமுடியுமே தவிர, மாகாண முதலமைச்சர் விடுக்க முடியாது.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் வருகை, இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை சீர்குலைக்கும் சதித்திட்டமாக இருக்கலாம் என்றார்.

English summary
Sri Lanka must not allow Prime Minister Manmohan Singh to visit the country’s former war zone in the Tamil-dominated north, since he declined to attend the CHOGM summit, the main opposition UNP said on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X