For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அனல் பறக்கும் இலங்கை அரசியல்.. நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி.. கவிழ்ந்தது ராஜபக்சே அரசு

இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி- வீடியோ

    கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றுள்ளது. இதில் ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க தவறினார்.

    இந்த நிலையில் இலங்கையில் இன்று நாடாளுமன்றம் கூடியது. சபாநாயகர் கரு.ஜெயசூர்யா தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது.

    இலங்கையில் அடுத்தடுத்த அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இலங்கையின் பிரதமர் என்பதற்கான அரசியல் போட்டி உச்சமடைந்து இருக்கிறது.

    சில வாரம் முன் இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினார்.

    நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவில்லை

    நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவில்லை

    இதனால் இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சே தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அவருக்கு போதுமான எம்பிக்கள் ஆதரவு இல்லாத காரணத்தால் நாடாளுமன்றம் கூட்டப்படாமலே இருந்தது. ரணில் ஆதரவு எம்பிக்களை தனது பக்கம் இழுக்க ராஜபக்சே முயன்று வந்தார்.

    கலைத்தார்

    கலைத்தார்

    இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் வெற்றிபெற முடியாது என்றவுடன் அங்கு நாடாளுமன்றமே மொத்தமாக கலைக்கப்பட்டது. அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்தார். தேர்தலை சந்திக்க திட்டமிட்டு நாடாளுமன்றத்தை கலைத்தார் சிறிசேனா. இதனால் அங்கு பெரிய அளவில் அரசியல் குழப்பம் நிலவி வந்தது. அங்கு பிரதமர் பதவிக்காக ஜனவரி 5ம் தேதி தேர்தல் நடக்கும் என்று கூறினார்.

    இடைக்கால தடை

    இடைக்கால தடை

    இந்த நிலையில் இலங்கையில் நாடாளுமன்ற கலைப்பிற்கு அந்நாட்டின் உச்சநீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்தது. இலங்கையில் பிரதமர் தேர்தலை நடத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டது. டிசம்பர் 7-ம் தேதிவரை தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது குறித்து டிசம்பர் 7ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும், அதுவரை இடைக்கால தடை தொடரும் என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள்.

    இன்று கூடுகிறது

    இன்று கூடுகிறது

    இந்த நிலையில் இலங்கையில் இன்று நாடாளுமன்றம் கூடியது. சபாநாயகர் கரு.ஜெயசூர்யா தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. இதற்கு ரணில் விக்ரமசிங்கே மற்றும் அவரது கட்சியினர் கருப்பு உடையில் வந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முன் காலை அங்கு அனைத்து கட்சி கூட்டமும் நடந்தது.

    தீர்மானம் கொண்டுவரப்பட்டது

    தீர்மானம் கொண்டுவரப்பட்டது

    இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ரணில் விக்ரமசிங்கே சார்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்தை அடுத்து ராஜபக்சே வெளிநடப்பு செய்தார்.

    நிறைவேறியது

    நிறைவேறியது

    இதையடுத்து ராஜபக்சே வெளியேறிய பின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தது. பெரும்பான்மை எம்பிக்கள் ராஜபக்சவிற்கு எதிராக வாக்களித்தனர். இதனால் ராஜபக்சேவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றுள்ளது. இதில் ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க தவறினார். ராஜபக்சேவிற்கு பெரும்பான்மை இல்லை என்று கூறி நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. ராஜபக்சேவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    English summary
    Sri Lanka parliament meets today: Ranil may prove his Majority to become PM.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X