For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆகஸ்ட் 3 முதல் தபால் வாக்குப் பதிவு- சூடுபிடிக்கும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் களம்!

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 628925 பேர் விண்ணப்பித்திருந்த போதிலும், 566823 பேர் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் தபால் ஓட்டுகளைப் பதிவு செய்யலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களில் சுமார் 62102 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.

Sri lanka prepares for Postal Voting

இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 3,5,6 ஆம் தேதிகளில் தபால் வாக்களிப்பு நடைபெற உள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் கடந்த ஜூன் 26 ஆம் தேதி நள்ளிரவு கலைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகின்ற ஆகஸ்ட் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 6,151 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக இலங்கை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இவர்களில் அரசியல் கட்சிகள் சார்பாக 3, 653 வேட்பாளர்கள், சுயேட்சைகளாக 2, 498 வேட்பாளர்கள் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Postal voting for Sri Lanka's upcoming parliamentary elections will be held on 5th and 6th of August. An additional date on August 3rd has been allocated for school teachers to cast their postal votes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X