For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்றத்தை முடக்குவதாக அதிபர் அறிவிப்பு.. இலங்கையில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நிலை

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கையில் அறிவிக்கப்படாத எமெர்ஜெண்சி... ஸ்டாலின் கண்டனம்- வீடியோ

    கொழும்பு: இலங்கை, நாடாளுமன்றத்தை தற்காலிகமாக முடக்கி வைப்பதாக அந்த நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

    இன்று பகல் 12 மணியிலிருந்து நாடாளுமன்றம் முடக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Sri Lanka president Maithripala Sirisena suspends parliament

    இனிமேல் நவம்பர் 16ஆம் தேதி தான் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏறத்தாழ இலங்கையில் அவசரநிலை போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

    முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவை திடீரென நேற்று பிரதமராக அறிவித்த அதிபர் சிறிசேனா, ரணில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியிலிருந்து, விலக்குவதாக அறிவித்தார்.

    [ஒரு நாட்டுக்கு இரு பிரதமர்களா?, சிறிசேனாவின் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்லும் ரணில்!]

    ஆனால் இதை ரணில் விக்ரமசிங்கே ஏற்கவில்லை. தனக்குத்தான் பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்றும், அதிபருக்கு தகுதி நீக்கம் செய்ய அதிகாரம் இல்லை, இது சட்டவிரோதமான நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்றத்தை உடனே கூட்டுமாறும், அதில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்கே அதிபருக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் திடீரென நாடாளுமன்றத்தை முடக்குவதாக, சிறிசேன அறிவித்துள்ளார். இதன்மூலம், பெரும்பான்மை ஆதரவு ராஜபக்சே மற்றும் சிறிசேனாவுக்கு இல்லை என்பது அம்பலமாகி உள்ளது. எனவேதான், எமர்ஜென்சி போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கி உள்ளார் சிறிசேனா.

    English summary
    Sri Lanka’s President Maithripala Sirisena prorogued the parliament with effect from 12 noon on Saturday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X