For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையில் 42 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தூக்கு தண்டனை அமல்! போதை பொருள் கடத்தினால் கதை காலி

இலங்கையில் 42 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தூக்கு தண்டனை அமல்படுத்தப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கையில் 42 ஆண்டுகளுக்கு பின்னர் தூக்கு தண்டனை அமல்- வீடியோ

    கொழும்பு: இலங்கையில் 42 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தூக்கு தண்டனை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    பிலிப்பைன்ஸ், உலகில் போதை பொருள் கடத்தல் அதிகம் நடக்கும் நாடுகளில் ஒன்று. இங்கு போதை பொருளை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் அந்நாடு கஷ்டப்பட்டது. அமெரிக்காவிற்கு போதை பொருள் கும்பலை சேர்ந்தவர்களை நாடு கடத்தியும் கூட பிரச்சனை ஓய்ந்தபாடில்லை.

    Sri Lanka reinstates Death Sentence again to fight against Drugs Mafia

    அதன்பின், பிலிப்பைன்ஸ் போதை பொருள் கடத்தலுக்கு எதிராக தூக்கு தண்டனை சட்டத்தை கொண்டு வந்தது. இதனால் அங்கு பெரிய அளவில் போதை பொருள் கடத்தல் குறைந்துள்ளது. ஆனால் இலங்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பல லட்சம் பேர் போதை பொருள் பயன்பாட்டிற்கு அடிமை ஆகியுள்ளனர்.

    பல கோடி உலாவும் பெரிய சந்தையாக இலங்கையில் போதை பொருள் சந்தை விளங்குகிறது. இதன் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுவிட்டாலும் , சிறையில் இருந்து கொண்டே இந்த சந்தையை உயிர்ப்புடன் வைத்து இருக்கிறார்கள்.

    இந்த நிலையில்தான் இலங்கையில் 42 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தூக்கு தண்டனை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த போதை பொருள் கும்பலுக்கு எதிராக இந்த சட்டத்தை பயன்படுத்த இருக்கிறார்கள். இவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்கவில்லை என்றாலும், அவர்களை தூக்கில் போடும் சிறப்பு அதிகாரம் இந்த சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

    மேலும், அதிபர் சிறிசேனா ஒப்புதல் மட்டும் இருந்தால் போதும் போதை பொருள் கும்பல்களை எளிதாக தூக்கிலிட முடியும். பிலிப்பைன்ஸ் வரலாற்றை எடுத்துக்காட்டாக கூறி அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர். கடைசியாக 1976ம் ஆண்டு ஜூன் 26ம் தேதியன்று அங்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    English summary
    Sri Lanka reinstates Death Sentence again after 42 years to fight against Drugs Mafia.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X