For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உளவுத்துறை எச்சரிக்கையை அலட்சியம் செய்துவிட்டோம்.. மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு

Google Oneindia Tamil News

கொழும்பு: குண்டுவெடிப்பு குறித்து உளவுத்துறை எச்சரிக்கை அளித்தும் அலட்சியம் செய்ததற்கு மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்பு கேட்டது.

இலங்கையில் ஈஸ்டர் திருநாளான ஞாயிற்றுக்கிழமை அன்று ஏராளமானோர் பிரார்த்தனை செய்ய அங்கு கூடினர். அது போல் ஈஸ்டர் கொண்டாட்டத்துக்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஹோட்டல்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.

இந்த நிலையில் 3 தேவாலயங்களிலும் 4 ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 290 பேர் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 10 இந்தியர்கள் உயிரிழப்பு.. சுஷ்மா சுவராஜ் உறுதி இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 10 இந்தியர்கள் உயிரிழப்பு.. சுஷ்மா சுவராஜ் உறுதி

கொழும்பு தீவிரவாதிகள்

கொழும்பு தீவிரவாதிகள்

இந்த சம்பவம் குறித்து கடந்த 4-ஆம் தேதியே இந்திய உளவுத் துறை கண்டுபிடித்து இலங்கையை எச்சரித்தது. இந்திய உளவுத் துறை வழங்கிய எச்சரிக்கை தகவலில் கொழும்பில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் இடங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்திய தூதரக அலுவலகம்

இந்திய தூதரக அலுவலகம்

இதைத் தொடர்ந்து இலங்கை போலீஸ் தலைவர் பூஜீத் ஜெயசுந்தரா அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் 10 நாட்களுக்கும் முன்பு ஒரு கடிதம் எழுதினார். அதில் கொழும்பில் உள்ள முக்கிய தேவாலயங்கள் மற்றும் இந்திய தூதரக அலுவலகத்தில் தாக்குதல் நடைபெற வாய்ப்பு உள்ளது.

மன்னிப்பு

மன்னிப்பு

பாதுகாப்பை அதிகரிக்கவும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்த கடிதத்தையும் இந்திய அரசின் எச்சரிக்கையையும் இலங்கை அரசு அலட்சியம் செய்துவிட்டது. இதை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் இலங்கை அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

 கவனம் செலுத்தாததால்

கவனம் செலுத்தாததால்

இதுகுறித்து அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் ரஜித் சேனரத்ன கூறுகையில் 8 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு குறித்து உளவுத் துறை முன் கூட்டியே எச்சரிக்கைக்கு கவனம் செலுத்தாததற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். அதுபோல் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம் என பேட்டி அளித்துள்ளார்.

English summary
Srilankan Government asks apology to the people for not stopping despite it gets tip off from Intelligence about bomb blast
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X