For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை குண்டுவெடிப்பிற்கு காரணம் யார்?.. யார் அந்த ''01'' குழு?.. இலங்கை அரசு புதிய விளக்கம்!

இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின்புலத்தில் யார் இருப்பார்கள் என்பது குறித்த தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர துவங்கி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கை குண்டுவெடிப்பிற்கு காரணமான அந்த 01 குழு யார் ?- வீடியோ

    கொழும்பு: இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின்புலத்தில் யார் இருப்பார்கள் என்பது குறித்த தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர துவங்கி உள்ளது.

    இலங்கையில் நேற்று அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 300க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

    கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச், சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது.

    இலங்கை குண்டுவெடிப்பு.. இந்தியர்களின் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு.. இந்திய வெளியுறவுத் துறை தகவல் இலங்கை குண்டுவெடிப்பு.. இந்தியர்களின் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு.. இந்திய வெளியுறவுத் துறை தகவல்

    யாரும் இல்லை

    யாரும் இல்லை

    ஆனால் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதல் நடந்து 35 மணி நேரம் கடந்துவிட்டது. ஆனாலும் இன்னும் இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காமல் இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    என்ன பின்புலம்

    என்ன பின்புலம்

    அதேபோல் இலங்கை அதிகாரிகளும் இது தொடர்பாக பெரிய அளவில் ரகசியம் காத்து வருகிறார்கள். இது தொடர்பாக நேற்று பேட்டியளித்த இலங்கை அமைச்சர்கள் எல்லோரும் ''01'' குழு நடத்திய தாக்குதல் என்றே குறிப்பிட்டார்கள். அதாவது குழுவின் பெயரை குறிப்பிடாமல், எந்த விதமான அடையாளமும் சொல்லாமல் ரகசியம் காத்து வருகிறார்கள்.

    பலர் சந்தேகம்

    பலர் சந்தேகம்

    இவர்கள் யாரை 01 குழு என்று குறிப்பிடுகிறார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் தற்போது இலங்கை அமைச்சரவையின் செய்தி தொடர்பாளர் ரஜிதா இது தொடர்பாக அளித்த பேட்டியில், இதை உள்ளூர் ஆட்கள் செய்தது போல தெரியவில்லை. உள்ளூரை சேர்ந்த நபர்கள் இப்படிப்பட்ட தாக்குதல்களை திட்டமிட்டு நடத்த முடியாது. இது வெளியில் இருந்து யாரோ நடத்திய தாக்குதல்.

    சதி

    சதி

    இதற்கு பின் வெளிநாட்டு சதி இருப்பதாக தோன்றுகிறது. இது தொடர்பாக எங்கள் நட்பு நாடுகளிடம் உதவி கேட்டு இருக்கிறோம். கடந்த 3 மாதங்களில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு நபர்கள் குறித்து நாங்கள் ஆராய்ச்சி செய்வோம். விரைவில் உண்மைகள் வெளியே வரும் என்று அவர் கூறியுள்ளார்.

    English summary
    Sri Lankan Govt says that a gang of International Network Involved in Sri Lanka Bomb Blast.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X