For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்கள் நாட்டு மின்தட்டுப்பாட்டுக்கு சீனாவே காரணம்: இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

pavithra
கொழும்பு: இலங்கையில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டுக்கும், மின் கட்டண உயர்வுக்கும் சீனா அங்கு அமைத்துள்ள மின் உற்பத்தி நிலையம் அடிக்கடி பழுதடைந்து விடுவதுதான் காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார் இலங்கை எரிசக்தித் துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:-

இலங்கையில் சீன நிறுவனத்தால் அமைக்கப்பட்ட 300 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையம் அடிக்கடி பழுது ஏற்பட்டு செயல்படாமல் நின்று விடுகிறது.

இதன் காரணமாக, மின் தேவையை பூர்த்தி செய்ய தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டியுள்ளது.

இலங்கையின் மிகப்பெரிய மற்றும் ஒரே மின் நிலையமான அது, குறைந்தது 25 ஆண்டுகளுக்காவது செயல்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் மூன்றே ஆண்டுகளில் அது பழுதடைந்து நின்று விட்டது.

இதுபோன்ற தோல்விகள் சீனாவின் பெயரைக் கெடுத்துவிடும்' எனத் தெரிவித்துள்ளார் அவர்.

உலகிலேயே மிக அதிக மின் கட்டணம் வசூலிக்கப்படும் நாடாக இலங்கை விளங்குகிறது. அங்கு வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்குக் கூட யூனிட் ஒன்றுக்கு 35 சென்ட்கள், அதாவது சுமார் ரூ.22 வரை வசூலிக்கப் படுவது குறிப்பிடத்தக்கது.

English summary
Sri Lanka's energy minister blamed China for power shortages and high electricity prices, saying the island's biggest power station built by a Chinese company has suffered frequent breakdowns.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X