For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை வெளியுறவு அமைச்சர் பெயரிலான போலி ட்விட்டர் பக்கத்தில் மன்மோகன்சிங் குறித்து வதந்தி

இலங்கை வெளியுறவு அமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரிலான போலி ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் குறித்து பொய்யான தகவல் பதிவிட்டது சர்ச்சையாகிவிட்டது.

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை வெளியுறவு அமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரிலான போலி ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறித்து வதந்தி கிளப்பிவிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரிலான ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காலமாகிவிட்டதாக ஒரு தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

SriLanka Minister's fake Twitter account posts hoax message about Manmohan Singh

இந்த தகவலை பலரும் பகிர்ந்து கொள்ளவும் தொடங்கினர். ஆனால் இலங்கை அமைச்சர் ரவி கருணாநாயக்க இது தம்முடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமே இல்லை என அதிரடியாக மறுத்தார்.

அத்துடன் இந்த போலி ட்விட்டர் பக்கம் தொடர்பாக போலீசாரிடமும் அவர் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் ரவி கருணாநாயக்க விளக்கம் அளித்திருக்கிறார்.

English summary
SriLanka's Foreign Minister Ravi Karunanayake lodged a complaint with the police to probe into a false Twitter account in his name which had posted about the death of former Indian Prime Minister Manmohan Singh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X