For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனுத் தாக்கல் முடிவு: குருநாகல்- ராஜபக்சே, கொழும்பு- ரணில் போட்டி!!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் முடிவடைந்துள்ளது. அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குருநாகல் மாவட்டத்திலும் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கொழும்பு மாவட்டத்திலும் போட்டியிடுகின்றனர்.

225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 17-ந் தேதி நடைபெறவுள்ளது. இத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 6-ந் தேதி தொடங்கியது. இன்று நண்பகல் 12 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

குருநாகலில் ராஜபக்சே

குருநாகலில் ராஜபக்சே

இத்தேர்தலில் குருநாகலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அதேபோல் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.

ராஜபக்சே குடும்பத்தின் வேட்பாளர்கள்

ராஜபக்சே குடும்பத்தின் வேட்பாளர்கள்

மேலும் மகிந்த ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த சமல் ராஜபக்சே, நிருபமா தீபிகா ராஜபக்சே, நமல் ராஜபக்சே ஆகியோரும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்கள் ராஜபக்சேவின் சொந்த மாவட்டமான அம்பந்தோட்டாவில் போட்டியிடுகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராசா, சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், சித்தார்த்தன், சிறீதரன், சரவணபவன், மதினி நெல்சன் உள்ளிட்டோர் யாழில் களமிறங்குகின்றனர்.

மேலும் வன்னியிக் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், றோய் ஜெயக்குமார், முல்லைத் தீவில் விநோநோகராதலிங்கம், சாந்தி சிறிஸ்கந்தராஜா, கந்தையா சிவநேசன், மன்னாரில் சாள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்டோரும் போட்டியிடுகின்றனர்.

மட்டக்களப்பில் பொன் செல்வராஜா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், இரா.துரைரெத்தினம், கோ.கருணாகரன். சிறிநேசன் உள்ளிட்டோரும் போட்டியிடுகின்றனர்.

முன்னாள் புலிகள்...

முன்னாள் புலிகள்...

மூத்த தமிழ் ஊடகவியலாளர் வித்தியாதரன் தலைமையில் முன்னாள் விடுதலைப் புலிகள் பலர் இணைந்து உருவாக்கிய ஜனநாயக போராளிகள் கட்சியும் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளது. யாழ்ப்பாணம், வன்னியில் இக் கட்சியின் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோல் இலங்கையின் முன்னாள் கணக்கு தணக்கு தலைமை அதிகாரி சரத் சந்திரசிறி, ஜே.வி.பி. வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

English summary
Former Srilanka President Mahinda Rajapaksa is named first in the Kurunegala District UPFA nominations list for Parliament elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X