For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிபராகும் முன்னாள் ராணுவ செயலாளர்.. என்ன செய்வார் கோத்தபய ராஜபக்சே? தமிழர்களின் நிலை என்ன?

இலங்கையின் அதிபராக முன்னாள் ராணுவ அமைச்சர் கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்க இருப்பது அந்நாட்டு தமிழர்களுக்கு அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Gotabaya Rajapaksa wins Sri Lankan presidential election

    கொழும்பு: இலங்கையின் அதிபராக முன்னாள் ராணுவசெயலாளர் கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்க இருப்பது அந்நாட்டு தமிழர்களுக்கு அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இலங்கையில் தேர்தல் நடந்து முடிந்து வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நந்தசேனா கோத்தபய ராஜபக்சே இதில் முன்னிலை வகிக்கிறார்.

    இதனால் விரைவில் இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்க இருக்கிறார். இன்று மாலைதான் இதற்கான அதிகாரபூர்வமாக தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

     அண்ணன் போய் தம்பி வந்தார்.. ராஜபக்சே குடும்பத்தின் கையில் மீண்டும் அதிகாரம்.. யார் இந்த கோத்தபய? அண்ணன் போய் தம்பி வந்தார்.. ராஜபக்சே குடும்பத்தின் கையில் மீண்டும் அதிகாரம்.. யார் இந்த கோத்தபய?

    ராணுவ தளபதி

    ராணுவ தளபதி

    கோத்தபய ராஜபக்சே ராணுவ அமைச்சராக இருந்த போதுதான் தமிழ் விடுதலை புலிகளுக்கு எதிரான போரை முன்னின்று நடத்தினார். அப்போதுதான் போர் குற்றங்கள் நடந்ததாக இவர் மீது புகார்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான நீதியோ, முறையான முடிவோ இன்னும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது கோத்தபய ராஜபக்சே அதிபராக உள்ளார்.

    தமிழர்கள் எப்படி

    தமிழர்கள் எப்படி

    தமிழர்களுக்கு எதிரான நபர் என்று கோத்தபய ராஜபக்சே மீது பெரிய புகார் இருக்கிறது. அங்கு சிறுபாண்மையினராக இருக்கும் தமிழர்களை கோத்தபய ராஜபக்சே எதிர்க்கிறார். அதீத தேசியவாதம் பேசுகிறார். சிங்கள மக்களுக்கு மட்டுமே ஆதரவாக உள்ளார் என்று புகார் இருக்கிறது.

    ராணுவ தளபதியாக இருந்தார்

    ராணுவ தளபதியாக இருந்தார்

    தான் ராணுவ தளபதியாக இருந்த நேரத்தில் போர் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் முக்கிய பதவிகள் எல்லாம் சிங்கள மக்களுக்கே கொடுக்கப்பட்டது. மகிந்த ராஜபக்சேவின் மாஸ்டர் மைண்ட் இவர்தான் என்றும் கூறப்பட்டது. இதனால் இனிமேல் இவர் தமிழ் மக்களை எப்படி நடத்துவார், போரின் போது நடந்து கொண்டது போலவே இவர் இருப்பாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

    பிரச்சாரம் எப்படி செய்தார்

    பிரச்சாரம் எப்படி செய்தார்

    ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது வடக்கு மாகாணத்தில் பிரச்சாரம் செய்த கோத்தபய ராஜபக்சே, தமிழர்களுக்கு நான் எதிரானவன் கிடையாது. இலங்கையில் அனைத்து மக்களுடன் இணைந்து செயல்பட நான் விரும்புகிறேன். தமிழர்களுடன் இணைந்து பயணிக்க நான் விரும்புகிறேன் என்று கோத்தபய ராஜபக்சே தெரிவித்து இருந்தார்.

    தொடங்கினார்

    தொடங்கினார்

    இவர் ஆட்சிக்கு வந்த என்ன நடவடிக்கை எடுப்பார் என்று தமிழர்கள் இப்போதே எதிர்பார்க்க தொடங்கி உள்ளனர். இலங்கையில் இப்போதுதான் தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறுவாழ்வு பெற்று வருகிறார்கள். அவர்கள் இந்த திடீர் அரசியல் மாற்றத்தை பார்த்து அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளனர்.

    English summary
    Srilanka Presidential Elections: Gotabaya Rajapaksa gives a headache to Tamils who are a minority in the country.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X