For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் பிரச்சாரத்தில் தொண்டர்களை அடிக்க கை ஓங்கிய ராஜபக்ச... பரவும் வீடியோவால் பரபரப்பு

Google Oneindia Tamil News

கொழும்பு : இலங்கை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, தொண்டர்களை பிரதமர் வேட்பாளர் ராஜபக்ச அடிக்கப் பாய்ந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

இதையடுத்து ராஜபக்சவை தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது.

rajapaksa

அடுத்த மாதம் 13 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அவர் கடந்த சில தினங்களுக்கு முன் தமிழர்கள் வாழும் அனுராதபுரத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

தொடர்ந்து மத்தளம் மாவட்டம் அகுரஸ்ஸ நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க ராஜபக்சே வந்தார். அவரை கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு கைகுலுக்க முண்டியடித்தனர். அப்போது அங்கு சலசலப்பு நிலவியது. இதனால் ஆத்திரமடைந்த ராஜபக்ச திடீரென கட்சித்தொண்டர் ஒருவரை அடிக்க கையை ஓங்கினார். இதை பார்த்த சிலர் ராஜபக்சேயை தள்ளிவிட்டனர்.

இதனை தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவியது. உடன் வந்த பாதுகாப்புபடையினர் பாதுகாப்புடன் ராஜபக்சேயை, அங்கிருந்து மேடைக்கு அழைத்துச் சென்றனர். இக்காட்சி வீடியோவாக பதிவாகி சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இச்சம்பவத்தை தனது செய்தித் தொடர்பாளர் மூலம் ராஜபக்ச நியாயப்படுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய அவரது செய்தித் தொடர்பாளர் முன்னாள் அதிபர் ராஜபக்ச அந்த இடத்தை விட்டு செல்லும் போது, நபரொருவர் இடையூறு செய்ததாகவும், அந்த நபர் இரண்டு முறை மஹிந்தவின் கையை பிடித்தமையே இந்நிலைமை ஏற்பட காரணம் எனவும், அவர் குடிபோதையில் இருந்துள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

English summary
In Srilanka Prime minister candidate Rajapaksa tried to attack a party worker in his campaign. This vedio spread in social media
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X