For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முல்லைத் தீவில் விடாது கருப்பாய் விடுதலைப் புலிகள் புதைத்த தங்கத்தை தேடும் இலங்கை

விடுதலைப் புலிகள் புதைத்த தங்கத்தை இலங்கை ராணுவம் இன்றும் தேடியது.

By Mathi
Google Oneindia Tamil News

முல்லைத்தீவு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் புதைத்த தங்கம் இருப்பதாக நம்பும் இலங்கை ராணுவம், கடற்படை இன்று முல்லைத்தீவு பகுதியில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் வசம் இருந்த பெருமளவிலான தங்கத்தை இறுதி யுத்த காலத்தில் மண்ணில் புதைத்து வைத்தனர் என்பது செவிவழி செய்தி. புலிகளின் தங்கம் புதைக்கப்பட்ட இடத்தை 9 ஆண்டுகளாக இலங்கை அரசு தேடி வருகிறது.

Srilanka searches LTTE's Gold

கடந்த மாதம் 17-ந் தேதியன்று முல்லைத் தீவில் தங்கத்தை தேடும் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. 3 மணிநேரம் நடைபெற்ற அகழாய்வுப் பணியில் எதுவும் சிக்கவில்லை.

இந்நிலையில் இன்று மீண்டும் நீதிபதி லெனின்குமார் தலைமையில் புலிகளின் தங்கத்தை தேடும் பணி நடைபெற்றது. இலங்கை ராணுவம், கடற்படை அதிகாரிகள் அப்போது உடன் இருந்தனர்.

ஆனால் தங்கப் புதையல் எதுவும் இன்று சிக்கவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் மண்ணுக்கு அடியில்தான் புலிகளின் தங்கம் இருக்கிறது என திடமாக நம்புகிறது இலங்கை.

English summary
Srilankan Army conducted a seach operation in Mullaitheevu for the LTTE's Gold.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X