For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா, சீனா உதவியுடன் இலங்கை ராணுவத்தை நவீனமயமாக்குவோம்.... ரணில் விக்ரமசிங்க

Google Oneindia Tamil News

கொழும்பு: இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் இலங்கை ராணுவம் நவீனமயமாக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை ராணுவத்தில் பயிற்சியை நிறைவு செய்த சில படைப்பிரிவுகளின் ராணுவ அணிவகுப்பு தியாதலாவா நகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராணுவ அனுவகுப்பு மரியாதையை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டு உரையாற்றினார்.

Ranil Wickramasinghe

அப்போது, ஆசிய கண்டத்தில் இந்தியா, ஜப்பான் நாடுகளுக்கு அடுத்த படியாக பழமையானது இலங்கை ராணுவம். பாதுகாப்புத்துறையில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் நல்லுறவு பேணி வருகிறது. மேலும் இந்தியா சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் நல்லுறவு பேணுவது மட்டுமின்றி, இணைந்து செயல்படுவோம்.

வரும் 2025-ம் ஆண்டுக்குள் இலங்கை ராணுவத்தை நவீன மயமாக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்படும். கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை ராணுவம் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு அதில் மிகப்பெரிய வெற்றியும் கண்டுள்ளது. நாட்டுக்காக தங்களது உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் தியாகம் போற்றி, பாதுகாக்கப் பட வேண்டும். ராணுவ வீரர்களின் இந்த உழைப்பு பாராட்டுதலுக்குரியது.

ஆனால், ராணுவம் முயன்று பெற்ற இந்த வெற்றியை தங்களுடைய சொந்த அரசியல் செல்வாக்காக மகிந்த ராஜபக்சே காட்ட முயற்சிக்கிறார் என்றார்.

English summary
Srilanka Prime MInister Ranil Wickramasinghe said Srilankan Army will be modernized with the help of India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X