For Daily Alerts
Just In
முள்ளிவாய்க்காலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பயணம்!
யாழ்ப்பாணம்: ஈழத் தமிழர்கள் லட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் நாளை பார்வையிட உள்ளார்.
இலங்கைக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீரென பயணம் மேற்கொண்டுள்ளார். கொழும்பில் அவரை தமிழ் எம்பிக்கள் சிலர் வரவேற்றனர்.

இதையடுத்து இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன். இலங்கை பத்திரிகையாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் தனிப்பட்ட பயணமாக வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியைப் பார்வையிடவும் தமிழிசை சவுந்தரராஜன் திட்டமிட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.