For Quick Alerts
For Daily Alerts
இலங்கை: தமிழினப் படுகொலை நினைவு வாரம்- இன்று முதல் மே 18 வரை கடைபிடிப்பு!
யாழ்ப்பாணம்: இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழினப் படுகொலை நினைவு வாரம் இன்று முதல் கடைபிடிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது லட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதனை நினைவுகூறும் வகையில் மே 18-ந் தேதி தமிழினப் படுகொலை நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்த இனப்படுகொலை நினைவு வாரம் இன்று முதல் கடைபிடிக்கப்படுகிறது. யாழ்ப்பாண வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் செம்மணி படுகொலை நிகழ்விடத்தில் இன்று தமிழினப் படுகொலை நினைவு வாரம் தொடங்கியது.

அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம், குகதாஸ் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.